Advertisement


சுவப்னா சோகம் தீருமா

செப்டம்பர் 29, 2019 22:57
 Comments  
 


Swapna Barman, india team
 

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சுவப்னா, இன்னும் வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறாராம்.

இந்தோனேஷியாவில் 2018ல் காமன்வெல்த் விளையாட்டு (ஜகார்த்தா) நடந்தது. ‘ஹெப்டத்லான்’ போட்டியில் மொத்தம் 6,026 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சுவப்னா பர்மன் 22. இரண்டு கால்களிலும் தலா 2 என 12 விரல்களுடன், பொருந்தாத ‘ஷூ’ அணிந்து சாதித்த இவருக்கு, மேற்குவங்க அரசு ரூ. 10 லட்சம் பரிசு, அரசு வேலை, வீடு தருவதாக அறிவித்தது.

தற்போது ஒரு ஆண்டுக்கும் மேல் ஆன போதும் இன்னும் சுவப்னாவுக்கு வீடு தரப்படவில்லை. வாடகை வீட்டில் தான் இன்னும் வசித்து வருகிறார். 

சுவப்னா கூறியது:

ஆசிய விளையாட்டில் சாதித்த எனக்கு வீடு தருவதாக அரசு தெரிவித்தது. ஆனால் ரூ. 10 லட்சம் மட்டும் தான் கொடுத்தனர். பலமுறை வீடு கேட்டு வலியுறுத்தினோம். இதற்கு நிதிக்கமிட்டி மறுத்து விட்டதாக தெரிவித்தனர். இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. என்னை புறக்கணிப்பதாக உணர்கின்றேன். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஒலிம்பிக் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை பட்டியலில் இருந்தும் நீக்கி விட்டனர். இதில் இடம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேநேரம் இதற்காக வருந்தவில்லை. பயிற்சியில் கவனம் செலுத்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன் மீண்டும் ‘பார்முக்கு’ திரும்புவேன். இவ்வாறு சுவப்னா கூறினார்.

 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country