Advertisement


சுமித் நாகல் ‘நம்பர்–129’

அக்டோபர் 07, 2019 18:50
 Comments  
 


Sumit Nagal, ATP Tennis Ranking
 

புதுடில்லி: ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் சுமித் நாகல், முதன்முறையாக 129வது இடத்துக்கு முன்னேறினார்.

டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல், 135வது இடத்தில் இருந்து முதன்முறையாக 129வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் அர்ஜென்டினாவில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் தொடரில் கோப்பை வென்றிருந்த இவர், பிரேசிலில் நடந்த ஏ.டி.பி சாலஞ்சர் தொடரில் அரையிறுதி வரை சென்றிருந்தார்.

மற்றொரு இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 2 இடங்கள் முன்னேறி 82வது இடத்தை பிடித்தார்.

முதல் மூன்று இடங்களில் முறையே செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபெல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தொடர்கின்றனர். சமீபத்தில் முடிந்த சீன ஓபனில் காலிறுதி வரை சென்ற பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 503வது இடத்தில் இருந்து 289வது இடத்துக்கு முன்னேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?