Advertisement


பெடரர் ‘1500’

அக்டோபர் 22, 2019 13:49
 Comments  
 


federer, tennis, 1500 match basel
 

பசல்: சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது 1500வது போட்டியில் பங்கேற்றார் ரோஜர் பெடரர்.

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 38. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 20 கோப்பைகள் வென்றுள்ளார். சொந்த ஊரில் ‘சுவிஸ் இன்டோர்ஸ்’ ஏ.டி.பி., டென்னிஸ் தொடரில் பங்கேற்கிறார். இத்தொடரில் களமிறங்கிய 12 முறையும் பைனலுக்கு முன்னேறியுள்ள பெடரர், கடந்த 2013க்குப் பின் தொடர்ந்து 20 வெற்றிகள் பெற்றுள்ளார்.

இம்முறை முதல் சுற்றில், ஜெர்மனியின் பீட்டரை எதிர்கொண்டார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் இது, பெடரரின் 1500வது போட்டியாக அமைந்தது. இதில் 6–2, 6–1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார். 

இரண்டாவது வீரர்

டென்னிசில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவர் 1556 போட்டிகளில் (1274 வெற்றி, 282 தோல்வி) பங்கேற்றார். இந்த வரிசையில் பெடரர் (1500 போட்டி, 1232 வெற்றி, 268 தோல்வி) 2வதாக உள்ளார். செக் குடியரசின் இவான் லெண்டில் (1310ல், 1068 வெற்றி, 242 தோல்வி), ஸ்பெயினின் நடால் (1163ல், 967 வெற்றி, 196 தோல்வி) அடுத்து உள்ளனர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?