Advertisement


ஆஷ்லே பார்டி சாம்பியன்

நவம்பர் 03, 2019 21:18
 Comments  
 


Australian Ashleigh Barty wins WTA Finals
 

ஷென்ஜென்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி கோப்பை வென்றார்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் தரவரிசையில் ‘டாப்–8’ வீராங்கனைகள் மட்டும் மோதும், டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் நடக்கும். இம்முறை, சீனாவின் ஷென்ஜென்னில் நடந்தது. இதில் ஜப்பானின் ஒசாகா, ருமேனியாவின் ஹாலெப் உள்ளிட்ட எட்டு வீராங்கனைகள், தலா 4 ஆக பிரிக்கப்பட்டு மோதினர். இதன் பைனலில் ‘நம்பர்–1’ வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, உக்ரைனின் எலினா ஷிவ்டோலினா (8வது இடம்) மோதினர். முதல் செட்டை 6–4 என வென்ற ஆஷ்லே, அடுத்த செட்டையும் 6–3 என எளிதாக வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் 26 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஆஷ்லே பார்டி 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ‘நடப்பு சாம்பியனாக’ இருந்த ஷிவ்டோலினா ஏமாற்றத்தை சந்தித்தார்.

1976

இதன் மூலம், டபிள்யு.டி.ஏ., பைனல்சில் 1976க்குப்பின், கோப்பை வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், எவோன்னே கூலாகாங் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

செரினாவுக்குப்பின்....

இத்தொடரில் 2014க்குப்பின் கோப்பை வென்ற முதல் ‘நம்பர்–1’ வீராங்கனையானார். 2014ல் அமெரிக்காவின் செரினா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தி இருந்தார்.

31 கோடி பரிசு

பைனலில் வென்ற ஆஷ்லே பார்டிக்கு, கோப்பையுடன் ரூ. 31.17 கோடி பரிசு தரப்பட்டது. இது, டென்னிஸ் வரலாற்றில் தரப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?