Advertisement


ஜோஷ்னாவின் இலக்கு

நவம்பர் 03, 2019 21:26
 Comments  
 


joshna, squash, india
 

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 33. இவர், காமன்வெல்த் விளையாட்டு (2014ல் தங்கம், 2018ல் வெள்ளி, இரட்டையர் பிரிவு), ஆசிய விளையாட்டு (2018, ஒற்றையரில் வெண்கலம், அணிகள் பிரிவில் வெள்ளி) போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தார். தற்போது உலக தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள இவர், ‘டாப்–10’ வரிசையில் இடம் பிடிக்க விரும்புகிறார்.

இதுகுறித்து ஜோஷ்னா கூறியது: சமீபத்தில் முடிந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்ல முடியாதது ஏமாற்றம். உலக தரவரிசையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ‘டாப்–10’ பட்டியலில் இடம் பிடிக்க விரும்புகிறேன். இதுவே என்னுடைய இலக்கு. இதற்காக திட்டமிட்டு விளையாட உள்ளேன்.

வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடக்கவுள்ள தெற்காசிய விளையாட்டுக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என நம்புகிறேன். வரும் 2022ல் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு நடக்கவுள்ளது. இதில் பங்கேற்று இந்தியாவுக்கு பதக்கம் வென்று தர விரும்புகிறேன். இதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. தற்போது உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு ஜோஷ்னா சின்னப்பா கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?