Advertisement


ஆனந்தன் லட்சியம் நிச்சயம் வெல்லும்

நவம்பர் 03, 2019 21:30
 Comments  
 


Blade runner Anandan says his next aim is to compete in the Tokyo Paralympics next year
 

உலக ராணுவ விளையாட்டில் மூன்று தங்கம் கைப்பற்றிய தமிழக தடகள வீரர் ஆனந்தன் குணசேகரன், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.

தமிழகத்தின் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆனந்தன் குணசேகரன் 32. கடந்த 2005ல் ராணுவத்தில் இணைந்தார். கண்ணிவெடி தாக்குதலில், இடது முழங்காலை இழந்தார். மாற்றுத்திறனாளி வீரர் பிஸ்டோரியசை (தெ.ஆப்.,) போல தடகளத்தில் சாதிக்க நினைத்த இவர், 2017 பாரா தடகள கிராண்ட்பிரிக்சில் 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார்.

2018ல் ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளி (400 மீ.,), வெண்கலம் (200 மீ.,) கைப்பற்றினார். சமீபத்தில் சீனாவில் நடந்த உலக ராணுவ விளையாட்டில் 100, 200 மற்றும் 400 மீ., ஓட்டங்களில் சாதித்து மூன்று தங்கம் வென்றார்.

தனது அடுத்த லட்சியம் குறித்து ஆனந்தன் குணசேகரன் கூறியது: கடந்த 2008ல் காஷ்மீர் எல்லைப்பகுதியில் நானும், மூன்று வீரர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டோம். ஒரு இறக்கத்தில் இறங்கிய போது, மூன்று பேர் முன்னால் சென்று விட்டனர். துரதிருஷ்டவசமாக எனது இடது கால் கண்ணி வெடியில் சிக்கிக்கொண்டது. வேறு வழியில்லாத நிலையில் காலை அகற்ற வேண்டியதாயிற்று. ஆறு மாதத்துக்குப் பின் கும்பகோணத்திற்கு கட்டைக்காலுடன் வந்தேன். மீண்டும் ராணுவத்தில் இணைந்தேன். தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் (‘பாராலிம்பிக்’) பங்கேற்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துள்ளேன். 

இதற்கான 200 மீ., ஓட்ட இறுதிக்கட்ட தகுதி போட்டி 2020, மே மாதம் நடக்க உள்ளது. இந்த தடையை மட்டும் தாண்டி விட்டால் போதும். டோக்கியோ சென்று விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?