Advertisement


கோப்பை வென்றார் ஜோகோவிச்

நவம்பர் 03, 2019 23:07
 Comments  
 


Djokovic cruises past Shapovalov to fifth Bercy title
 

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் கோப்பை வென்றார்.

பிரான்சில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நம்பர்–1’ வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 28வது இடத்திலுள்ள கனடாவின் டேனிஷ் சபோவலோவை எதிர் கொண்டார். முதல் செட்டை 6–3 என தனதாக்கிய ஜோகோவிச், எதிர்பார்த்தபடி அடுத்த செட்டையும் 6–4 என வென்றார். ஒரு மணி நேரம் 5 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஜோகோவிச் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், இத்தொடரில் அதிக முறை (5) கோப்பை வென்ற வீரர் என்ற சாதனை படைத்தார்.

மாஸ்டர்ஸ் அந்தஸ்து பெற்ற தொடரில் அதிக பட்டம் (34) வென்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (35) முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த ஏ.டி.பி., அரங்கில், ஒற்றையரில் அதிக பட்டம் (77) கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தை, அமெரிக்க முன்னாள் வீரர் ஜான் மெக்கென்ரோவுடன் பகிர்ந்து கொண்டார். நடால் 4வது இடம் (84) வகிக்கிறார். அமெரிக்க முன்னாள் வீரர் ஜிம்மி கானர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?