Advertisement


புதிய கேப்டனுக்கு பூபதி எதிர்ப்பு

நவம்பர் 06, 2019 22:03
 Comments  
 


AITA saying I am fired for refusing national duty is unacceptable to me, Bhupathi
 

புதுடில்லி: டேவிஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி புதிய கேப்டனாக ரோகித் ராஜ்கோபால் நியமிக்கப்பட்டார். இதற்கு பூபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசிய–ஓசியானா ‘குரூப் 1’ பிரிவில், இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முதலில், இப்போட்டி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நவம்பர் 29ல் நடக்க இருந்தது. பாதுகாப்பு காரணமாக இந்திய அணியிலிருந்து விளையாடாத ‘ரெகுலர்’ கேப்டன் பூபதி மற்றும் போபண்ணா உள்ளிட்டோர் விலகினார். சீனியர் வீரர் பயஸ், சாகித் மைனேனி உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இதற்கிடையே, போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றப்பட்டது. பூபதிக்குப்பதில் ரோகித் ராஜ்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

25 ஆண்டுகள்

இது குறித்து பூபதி கூறுகையில்,‘‘ இந்திய அணிக்காக 25 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். பாகிஸ்தானில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், டேவிஸ் கோப்பை தொடரில் பங்கேற்க மறுத்தேன். தேசிய அணிக்காக பங்கேற்க நான் மறுப்பு தெரிவித்ததாக கூறுவதை ஏற்க முடியாது. அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துவிட்டோம் என கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். முதலில், இஸ்லாமாபாத்தில் நடக்கும் போட்டிக்கு மட்டுமே ரோகித் கேப்டனாக இருப்பார் என, அகில இந்திய டென்னிஸ் சங்க (ஏ.ஐ.டி.ஏ.,) செயலர் ஹிரோன்மே சட்டர்ஜி தெரிவித்தார். தற்போது, போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதன்பின்பும் எதற்காக இவரை கேப்டனாக நியமித்துள்ளார்கள்,’’ என்றார்.

ஏ.ஐ.டி.ஏ., செயலர் ஹிரோன்மே சட்டர்ஜி கூறுகையில்,‘‘ கடந்த 4ம் தேதி பூபதியை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். இந்திய அணி கேப்டன் பதவிக்கு புதிய நபரை நியமிக்க உள்ளதாக தெரிவித்துவிட்டேன்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?